உரங்கள் துறை
azadi ka amrit mahotsav

விவசாயிகளுக்கு உரங்கள் குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வது , கள்ளச்சந்தையைத் தடுப்பது உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகள் - மத்திய அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல்

प्रविष्टि तिथि: 28 JUL 2026 4:11PM by PIB Chennai

விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் சரியான நேரத்தில், போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்வது, அதே வேளையில் கள்ளச்சந்தை, பதுக்கல், உரங்களை வேறு நோக்கங்களுக்குத் திசைதிருப்புதல், தரமற்ற உரங்களை விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை மேற்கொள்வதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

நாடு முழுவதும் தடையற்ற உர விநியோகத்தை உறுதி செய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும், அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், ஒரு விரிவான செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயிர்களுக்கான ஒவ்வொரு பருவத்திலும் உரங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, வேளாண்  நலத்துறை, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, முன்கூட்டியே மாநில, மாத வாரியான உரத் தேவையை மதிப்பீடு செய்கிறது. இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், உரத்துறை மாதந்திர விநியோகத் திட்டங்கள் மூலம், போதுமான அளவை ஒதுக்கீடு செய்கிறது.

தரமான பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பூச்சிக்கொல்லிகள் சட்டம் 1968,  பூச்சிக்கொல்லிகள் விதிகள் 1971 ஆகியவற்றின் விதிகளையும் மத்திய அமைச்சகம் செயல்படுத்துகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி ஆய்வாளர்கள், தரப் பரிசோதனைக்காக உற்பத்தி நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து அவ்வப்போது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூச்சிக்கொல்லி ஆய்வாளர்களால் அவை பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை மாதிரிகள் பூர்த்தி செய்யாத பட்சத்தில், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விலையைக் குறைக்கவும் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், பதிவுக்கான குழு பொதுப் பெயரில் உள்ள பூச்சிக்கொல்லிகளுக்கான பதிவுகளை விரைவாக வழங்குகிறது. இதற்கான பதிவு கட்டணம், சட்டத்தின் பிரிவு 9(3)-ன் கீழ், ரூ 2,25,000-க்கு மாறாக, பிரிவு 9(4)-ன் கீழ் ரூ 25,000-மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று, மத்திய உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290436&reg=3&lang=1

(Release ID: 2290436)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290816) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati