மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மீன்வள காப்பீட்டுத் திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,66,006 மீனவர்கள் பதிவு செய்துள்ளனர்
प्रविष्टि तिथि:
28 JUL 2026 3:55PM by PIB Chennai
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மீனவள மேம்பாட்டிற்காக 2020-21-ம் நிதியாண்டு முதல் தற்போது வரை ரூ.20,750 கோடி முதலீட்டில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய மீன்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் கடல், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் அது சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கூட்டு விபத்து காப்பீட்டு வசதி மூலம் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை மத்திய, மாநில அரசுகளால் 60 : 40 என்ற விகிதத்திலும் இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. யூனியன் பிரதேசங்களுக்கு முழு பிரீமியத் தொகையையும் மத்திய அரசு செலுத்துகிறது.
இறப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கு ரூ.5 லட்சம், நிரந்தர பகுதி இயலாமைக்கு ரூ.2,50,000 விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000 வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மற்றும் நடப்பு நிதியாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 35,74,000 மீனவர்கள் கூட்டு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,66,006 மீனவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இத்தகவலை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் மக்களவையில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போது தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290417®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2290756)
आगंतुक पटल : 14