புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் சூரியமின்சக்தி வீடுகள் திட்டம் மானிய உதவி, குறைந்த வட்டிக்கடன் வசதியுடன் அனைவரும் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ வகை செய்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 28 JUL 2026 3:41PM by PIB Chennai

பிரதமரின் சூரியமின்சக்தி வீடுகள் மின்சாரத் திட்டத்தின் கீழ், நடுத்தர வருவாயைக் கொண்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தினருக்கு சூரியமின்சக்தி அமைப்புகளை குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் இரண்டு கிலோவாட் மின்சாரம் வரையிலான மேற்கூரை சூரியசக்தி மின்அமைப்பு நிறுவலுக்கு அதிக அளவில் மத்திய அரசு நிதியுதவி.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பிணையில்லாக் கடன் வசதி அதாவது பத்து ஆண்டுகளுக்கு தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 5.7 சதவீதம் என்ற அளவில் வட்டி விகிதம்.

இத்திட்டத்தின் கீழ், 2026-27-ம் நிதியாண்டுக்கு ரூ.22,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு 2026 ஜூலை 22 வரை ரூ.10,392.48 கோடி செலவிடப்பட்டுள்ளது. 48,02,717 வீடுகளில் மொத்தம் 39,72,447 மேற்கூரை மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் நுகர்வோரின் மின்கட்டணம் பெருமளவு குறைந்துள்ளது.

 

இத்தகவலை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290407&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2290752) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Kannada