ஜவுளித்துறை அமைச்சகம்
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் புத்தாக்க முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
28 JUL 2026 2:14PM by PIB Chennai
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிக்கம் நோக்கத்துடன் ஜவுளி அமைச்சகம் 2023-ம் ஆண்டு முதல் தேசியத் தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், தொழில்நுட்ப ஜவுளிகளில் ஆர்வமிக்க புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவுக்கான மானியம் என்ற திட்டத்தை (கிரேட்) அமல்படுத்தி வருகிறது. இத்திட்டம் இளம் கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனங்களில் கருத்துக்களை வர்த்தக ரீதியான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான உதவிகளை அளிக்கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.15.40 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.13.65 கோடியாகும்.
தேசியத் தொழில்நுட்ப ஜவுளிகள் இயக்கம் என்பது நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் இயக்கமாகும். கிரேட் திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒவ்வொரு புத்தொழில் நிறுவனத்திற்கும் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. கிழக்கு உத்தரப்பிரதேசம் உள்பட நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப ஜவுளித்துறையைச் சேர்ந்த தகுதியுடைய புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிரேட் திட்டத்தை ஊக்குவிக்க பொது நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்றவற்றை இந்த இயக்கம் மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 6 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290319®=3&lang=1
***
TV/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2290463)
आगंतुक पटल : 11