ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் திட்டத்தின் கால நீட்டிப்பு, கிராமப்புற குடிநீர் விநியோகத் திட்டங்களை மேம்படுத்த உதவிடும்
प्रविष्टि तिथि:
27 JUL 2026 6:09PM by PIB Chennai
நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பின் மூலம், நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் (பிஐஎஸ்:10500), போதிய அளவில் (ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர்) சீரான, நீண்ட கால அடிப்படையில், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து 'ஜல் ஜீவன் இயக்கம் - (ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர்) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
குடிநீர் விநியோகத் திட்டங்களின் வெற்றிகரமான செயல்பாட்டை முன்னிட்டு, கிராமப்புற குடிநீர் உள்கட்டமைப்பின் நீண்டகால நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராம சபைகள், உள்ளூர் சமூகங்களின் தீவிர பங்கேற்புடன் நகர்ப்புற ஜல் அர்பன் என்ற சமூகம் சார்ந்த பொது நிகழ்வு நடத்தப்படுகிறது. ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் நிலையான, மக்கள் பங்கேற்பதுடன் தொடர் சேவையை வழங்குவதை ஊக்குவிக்கிறது. நகர்ப்புற ஜல் ஜீவன் முயற்சியின் கீழ், சமூகத்தால் நிர்வகிக்கப்படும் குழாய் வழி குடிநீர் அமைப்புகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத் திட்டங்களைச் சுமூகமாக மேற்கொள்வதையும், அவற்றின் நிலையான செயல்பாட்டையும் உறுதிசெய்ய, கிராம ஊராட்சிகள், கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் (VWSCs) அல்லது உறுப்பினர்களை உள்ளடக்கிய 15 நாள் சோதனை நடவடிக்கைகள் குறித்த கையேடு கட்டாயமாக்குகிறது.
தமிழகத்தில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், 112.64 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் தூய்மையான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புறக் குடும்பங்களுக்குக் குழாய் வழி குடிநீர் வசதியை மேம்படுத்துவதில், நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290048®=3&lang=1
(Release ID: 2290048)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2290193)
आगंतुक पटल : 6