மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவோதயா வித்யாலயா பள்ளி வளாகங்களில் விடுதிகள் அமைத்தல்

प्रविष्टि तिथि: 27 JUL 2026 6:08PM by PIB Chennai

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி வளாகங்களில், விடுதிகள் / தங்கும் அறைகள் உட்பட நிரந்தரக் கட்டிடங்களை அமைப்பது குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விடுதிகள் உட்பட ஜவஹர் நவோதயா வித்யாலயா  கட்டிடங்களை அமைப்பது ஒரு தொடர் நடவடிக்கையாகும். இதன் செயல்பாடுகள் பொருத்தமான நிலத்தைக் கண்டறிதல், உதவிகளை வழங்கும் அமைப்புகளால் நவோதயா வித்யாலயா சமிதி என்ற பெயரில், குத்தகை நடைமுறைகளை நிறைவு செய்தல், கட்டுமான முகமையால் வரைபடங்கள் / மதிப்பீடுகளைச் சமர்ப்பித்தல், நிதி, தேவையான அனுமதிகள் கிடைத்தல், வித்யாலயாவின் வளர்ச்சி போன்ற காரணிகளைச் சார்ந்துள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளைத் திறம்படப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில், நவோதயா வித்யாலயா பள்ளிகள் (கட்டம்-ஏ, கட்டம்-பி, கட்டம்-பி (எஞ்சியுள்ளவை)) என மூன்று கட்டங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெறும். முதலாவது கட்ட கட்டுமான பணிகளின் கீழ், பள்ளி கட்டிடம், சமையலறை, உணவருந்தும் கூடம், பகுதி அளவிலான தங்கும் அறைகள், பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிகளின் கீழ், பகுதி அளவிலான தங்கும் அறைகள், பணியாளர் குடியிருப்புகளும், மூன்றாவது கட்டத்தின் (எஞ்சியுள்ளவை) கீழ், மீதமுள்ள தங்கும் அறைகளும், அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டு வருகின்றன.

நவோதயா வித்யாலயா சமிதியிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், கான்சிராம்நகர் (192 படுக்கைகள்), ஹாபூர் (384 படுக்கைகள்), ஷாம்லி (192 படுக்கைகள்), படாவுன் (192 படுக்கைகள்), சுல்தான்பூர் (288 படுக்கைகள்) ஆகிய மாவட்டங்களில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளி வளாகங்களில், 2023-24-ம் ஆண்டில் விடுதி / தங்கும் அறை படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2025-26-ம் நிதியாண்டில், ஜிபி நகர் (24 படுக்கைகள்), சீதாபூர்-I (48 படுக்கைகள்) ஆகிய இடங்களில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில், விடுதி/தங்கும் அறை (படுக்கை) வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில், விடுதி / தங்கும் அறை (படுக்கை வசதி கொண்டது) கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட அல்லது நிறைவடைந்த நவோதயா வித்யாலயாக்கள் குறித்த மாநிலம் / யூனியன் பிரதேச வாரியாக விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்களவையில், மத்திய கல்வி அமைச்சக இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி  எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290047&reg=3&lang=1

(Release ID: 2290047)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290143) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी