திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தேசிய தொழில்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம்- 2 முக்கிய அம்சங்கள் - தமிழகத்திற்கு, ரூ. 181.44 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
27 JUL 2026 3:57PM by PIB Chennai
தேசிய தொழில்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், பயிற்சி வழங்கவும், அதில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2022-23-ம் ஆண்டு முதல், இத்திட்டம் தேசிய தொழில்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம்-2 என்ற பெயரில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம், தொழில்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு, மத்திய அரசு பகுதிநேர உதவித்தொகை வழங்குகிறது. இதில் மத்திய அரசின் பங்களிப்பாக, இந்த உதவித்தொகை, நேரடிப் பயன் பரிமாற்ற முறை மூலம், தொழில் பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும், சரியான நேரத்தில், உதவித்தொகை வழங்குவதும் உறுதி செய்யப்படுகிறது.
நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் துறைசார் திறன் மேம்பாட்டுக் குழுக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் கூடிய குறைந்தபட்ச உதவித்தொகை விகிதங்களை மாற்றியமைப்பதற்கான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டது. இந்த முன்மொழிவுக்கு மத்திய தொழில் பழகுநர் குழு, (26.05.2025 அன்று நடைபெற்றது) ஒப்புதல் அளித்தது. பின்னர், திருத்தியமைக்கப்பட்ட உதவித்தொகை விகிதங்கள் 11.09.2025 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டன.
2018-19 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை (30 ஜூன் 2026 வரை) இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டத் தொழில் பழகுநர்கள், பங்கேற்கும் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உட்பட) தமிழகத்தில், தேசிய தொழில்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தொழில் பழகுநர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,446 ஆகவும், பணியமர்த்தப்பட்டுள்ள பழகுநர்களின் எண்ணிக்கை 5,41,317 ஆகவும் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம், உதவித்தொகையாகத் தமிழகத்திற்கு, ரூ. 181.44 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289894®=3&lang=1
(Release ID: 2289894)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2290101)
आगंतुक पटल : 15