நிலக்கரி அமைச்சகம்
அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இறக்குமதி 27.4 சதவீதம் குறைவு: மத்திய இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2026 5:11PM by PIB Chennai
இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களால் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு 2025-26 நிதியாண்டில் 27.4 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், 2024-25 நிதியாண்டில் 62.5 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி இறக்குமதி, 2025-26 நிதியாண்டில் 45.4 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளதாகக் கூறினார். இதேபோல் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி இயங்கும் அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதியும் 2026 ஏப்ரல் மாதத்தில் 27.45 சதவீதம் குறைந்து 2.88 மில்லியன் டன்னாகப் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார உற்பத்தித் துறையில் நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருத்தப்பட்ட சக்தி கொள்கை 2025-ன் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை நம்பியுள்ள மின் நிலையங்கள் உள்நாட்டு நிலக்கரியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த நிலக்கரி தளவாடத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 33 முக்கிய ரயில்வே திட்டங்கள், முதல்கட்ட இணைப்புக்கான உள்கட்டமைப்பு விரிவாக்கம், ரயில், கடலோரக் கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள் மூலமாகப் பல்வகைப் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நிலக்கரித் துறையில் இறக்குமதியைத் தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289973®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2290081)
வருகையாளர் எண்ணிக்கை : 41