திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விண்வெளி, புவிசார் துறைகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி - தமிழகத்திலிருந்து 80,806 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்

प्रविष्टि तिथि: 27 JUL 2026 3:55PM by PIB Chennai

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம், நாடு முழுவதும் (தமிழ்நாடு உட்பட) உள்ள சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், பல்வேறு திட்டங்களின் வாயிலாக திறன் பயிற்சி, மறு-திறன் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை, திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் வழங்கி வருகிறது. இத்திட்டம், நாட்டில் உள்ள இளைஞர்களைத் தொழில்துறைக்குத் தேவையான திறன்களுடன், எதிர்காலத்திற்கு ஏற்பத் தயார்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், போன்ற முக்கியத் திட்டங்கள் மூலம், விண்வெளி, புவிசார் துறைகளில்  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

இவை தரவு மேலாண்மை, ட்ரோன் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, தொலைத்தொடர்பு, மின்னணுவியல் போன்ற துறைகளில் குறுகிய காலப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, மறு-திறன் பயிற்சி (முந்தைய கற்றலை அங்கீகரித்தல் மூலம்), பணி-சார்ந்த தொழில்பழகுநர் பயிற்சி ஆகியவற்றை வழங்குகின்றன.

 

மேலும், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் திறனை வலுப்படுத்த, விண்வெளித் துறையின் கீழ் இயங்கி வரும் இன்-ஸ்பேஸ் அமைப்பு விண்வெளி தொழில்நுட்பத்தில், 11 குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் இதில் பயிற்சி பெற்றுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில், விண்வெளி, புவிசார்  துறைகளில், தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி பெற்றவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையில் முறையே 8,501 & 72,305 பேர் பயனடைந்துள்ளனர்.

மத்திய அரசின் திட்டங்களின் கீழ், தமிழகத்தில் உள்ள பயிற்சி மையங்கள்/நிறுவனங்களின் எண்ணிக்கை (30.06.2026 நிலவரப்படி) 1,198 ஆக உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு விண்வெளி தொழில்நுட்பப் பாடநெறிகளை நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களின் விவரங்கள் அடிப்படையில் (30.06.2026 நிலவரப்படி), தமிழ்நாட்டில், இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை, எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

மக்களவையில் இன்று, மத்திய திறன் மேம்பாடு,  தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289890&reg=3&lang=1

(Release ID: 2289890)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290074) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी