ஆயுஷ்
லடாக் யூனியன் பிரதேசம், லே பகுதியில் யோகா நல்வாழ்வு பயிற்றுவிப்பாளர் சான்றிதழ் படிப்புத் தொடக்கம்
प्रविष्टि तिथि:
27 JUL 2026 3:14PM by PIB Chennai
லடாக் யூனியன் பிரதேசம், லே பகுதியில் உள்ள சோவா-ரிக்பா தேசிய நிறுவனத்தில், மூன்று மாத (400 மணிநேர) கால யோகா நல்வாழ்வு பயிற்றுவிப்பாளர் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், லே-யில் உள்ள சோவா-ரிக்பா தேசிய நிறுவனம் இணைந்து, இந்த சான்றிதழ் படிப்பை நடத்துகின்றன.
பிரதமரின் யோகா விருது பெற்றவரும், மகாபோதி சர்வதேச தியான மையத்தின் நிறுவனர்-தலைவருமான திரு பிக்கு சங்கசேனா, இந்த சான்றிதழ் படிப்பை தொடங்கி வைத்தார். சோவா-ரிக்பா தேசிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பத்மா குர்மெட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லடாக் யூனியன் பிரதேசத்தின் ஆயுஷ், சுகாதாரம், மருத்துவக் கல்வித் துறையின் இயக்குநர் டாக்டர் தஷி தின்லாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த யோகா நல்வாழ்வு சான்றிதழ் பயிற்சித் திட்டத்தின் கோட்பாடு, செயல்முறை என இரு அம்சங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று, இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாணவர்களை சோவா-ரிக்பா தேசிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பத்மா குர்மெட் கேட்டுக்கொண்டார்.
முழுமையான உடல் ஆரோக்கியம், நல்வாழ்வை பராமரிப்பதற்காக நவீன, பாரம்பரிய மருத்துவம், யோகா ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். லடாக் யூனியன் பிரதேசத்தில், யோகா பயிற்றுவிப்பாளர்களுக்கு உள்ள வாய்ப்புகள், சுகாதாரத் துறையில் யோகாவை இணைப்பதற்கான திட்டம் குறித்தும் டாக்டர் தாஷி தின்லாஸ் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289858®=3&lang=1
***
TV/SV/KR
(रिलीज़ आईडी: 2289976)
आगंतुक पटल : 11