சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கத்துறை செயலாளராக திரு கேஷவ் சந்த்ரா ஐஏஎஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUL 2026 12:55PM by PIB Chennai

மத்திய சுரங்கத்துறை செயலாளராக திரு கேஷவ் சந்த்ரா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் அமைச்சகத்தின் உயரதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமைத் தாங்கி அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்தும், தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தின்போது கனிம ஆய்வு, ஏலம், கனிமத் தொகுதிகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருதல், முக்கிய, உத்திசார்ந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் கனிமத்துறையில் இதர முக்கியப் பிரிவுகள் உட்பட அமைச்சகத்தின் பல்வேறு முக்கியத் திட்டங்கள், முன்முயற்சிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள்.

அப்போது, நாட்டின் கனிமத்துறையை வலுப்படுத்த அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகளின் திறன்மிக்க அமலாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து சுரங்கத் துறை செயலாளர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289798&reg=3&lang=1

***

TV/IR/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2289831) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu