சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 மத்திய பட்ஜெட்டில், நீதித்துறை உள்கட்டமைப்பு மற்றும் மின்னணு நீதிமன்ற நவீனமயமாக்கலுக்கு ₹2,010 கோடி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 25 JUL 2026 8:55PM by PIB Chennai

மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ், நீதித்துறை உள்கட்டமைப்புக்காக 2026 மத்திய பட்ஜெட்டில் ரூ. 810 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றங்களை மின்னணுமயமாக்கவும், அதற்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கிய மின்னணு  நீதிமன்ற திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைச் செயல்படுத்தவும், 2026 மத்திய பட்ஜெட்டில் ரூ. 1200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிதியின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டங்களின் கீழ் போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழக்குகளை விரைவாக முடிப்பது என்பது பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. அவற்றுள் வழக்கின் சிக்கலான தன்மை, விசாரணையின் தரம், தொடர்புடைய சான்றுகளின் இருப்பு மற்றும் அவற்றை வழக்கறிஞர்கள் முன்வைக்கும் விதம், நீதிமன்ற நடைமுறைகள் குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வழங்கப்படுதல், சம்பந்தப்பட்ட தரப்பினரின் தீவிர பங்கேற்பு மற்றும் நீதித்துறை நடைமுறைகள் ஆகியவை அடங்கும்.

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289465&reg=3&lang=1

***

TV/BR/KR


(रिलीज़ आईडी: 2289771) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi