சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 12 ஆண்டுகளில் 8 அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 25 JUL 2026 9:06PM by PIB Chennai

கடந்த 12 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு 8 முறை திருத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. அரசியலமைப்பு (99-வது திருத்தச்) சட்டம், 2014 (உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான குழு முறைக்கு மாற்றாக தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை அமைப்பது தொடர்பான சட்டம்)

2. அரசியலமைப்பு (100-வது திருத்தச்) சட்டம், 2015 (இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான நில எல்லை ஒப்பந்தம் தொடர்பான சட்டம்)

 3. அரசியலமைப்பு (101-வது திருத்தச்) சட்டம், 2016 (இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்டம்)

 4. அரசியலமைப்பு (102-வது திருத்தச்) சட்டம், 2018 (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான சட்டம்)

5. அரசியலமைப்பு (103-வது திருத்தச்) சட்டம், 2019 (அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான சட்டம்)

6. அரசியலமைப்பு (104-வது திருத்தச்) சட்டம், 2019 (மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுகளுக்கு, அதாவது 2030 ஜனவரி 25 வரை நீட்டிப்பது தொடர்பான சட்டம்)

 7. அரசியலமைப்பு (105-வது திருத்தச்) சட்டம், 2021 (அரசியலமைப்பின் 342ஏ  பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் அதனையடுத்து 338பி  மற்றும் 366-வது பிரிவுகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பான சட்டம்)

 8. அரசியலமைப்பு (106-வது திருத்தச்) சட்டம், 2023 (மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டம்)

 

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289474&reg=3&lang=1

***

TV/BR/KR


(रिलीज़ आईडी: 2289769) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी