ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் அமலாக்க நிலை

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:45PM by PIB Chennai

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், 2025–26 நிதியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 15,647.78 கி.மீ நீளமுள்ள 2,905 சாலைகளும் 1,042 பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டன. மேலும், தகுதியுள்ள 93 குடியிருப்புகளுக்கு அனைத்து வகையான பருவநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 26474 கி.மீ நீளமுள்ள சாலைகளும், 1375 பாலங்களுக்கும், 2400  குடியிருப்புகளுக்கும் சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 151 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் 11 பாலங்களுக்கான சாலைகளும் அடங்கும்.  

நடப்பு நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்  மொத்தம்  18010.48 கோடி ரூபாய் மத்திய நிதி ஒதுக்கப்பட்டு, அதில் 1494.62 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதுதமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 105 கோடி ரூபாயில், 31.02 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரிக்கான 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 8.29 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

இந்தத் தகவலை ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த  பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288999&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2289690) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी