விவசாயத்துறை அமைச்சகம்
மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்வது தொடர்பான மாநாடு
प्रविष्टि तिथि:
26 JUL 2026 6:09PM by PIB Chennai
வேளாண் அறிவியல் மேம்பாட்டு அறக்கட்டளை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமான ஐசிஏஆர், இந்திய விதைத் தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, "மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒழுங்குமுறைகளும் சீர்திருத்தங்களும்" என்ற தலைப்பில் ஒரு உயர்மட்ட வட்டமேசை மாநாடு, புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் வேளாண் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை கட்டமைப்பை நவீனமயமாக்குவது குறித்து விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், வேளாண் விஞ்ஞானிகள், ஒழுங்குமுறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தொழில்துறை தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், சர்வதேச நிபுணர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ஐசிஏஆர் தலைமை இயக்குநர் டாக்டர் எம்.எல். ஜாட், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கான கூட்டு முயற்சியைப் பாராட்டினார். அறிவியல் சார்ந்த, ஆதார அடிப்படையிலான வேளாண் புத்தாக்கத்தை மேம்படுத்துவதில் ஐசிஏஆர்-ன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
இந்தியா, சில வகை மரபணுத்திருத்தப்பட்ட தயாரிப்புகளுக்கு வேறுபட்ட ஒழுங்குமுறை அணுகுமுறையை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஒழுங்குமுறை அமைப்பு முழுவதும் தெளிவு, ஒத்திசைவு, முன்கணிப்புத்தன்மையை மேம்படுத்த மேலும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. உயிரியல் பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்வதற்கு ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக இந்த வட்டமேசைக் கூட்டம் நடைபெற்றது. வட்டமேசை மாநாட்டிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள், இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட, மரபணு திருத்தம் செய்யப்பட்ட பயிர்களில் சான்றுகள் அடிப்படையிலான சீர்திருத்தங்கள் குறித்து ஒரு விரிவான கொள்கை ஆவணம் தொகுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289644®=48&lang=1
***
(Release ID: 2289644)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2289665)
आगंतुक पटल : 19