ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கலந்தாய்வு மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 26 JUL 2026 5:30PM by PIB Chennai

எரிசக்தி, சுரங்கத் துறைகளைச் சேர்ந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் திட்டச் செயலாக்கம், சொத்து மேலாண்மை, நிறுவனச் சிறப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் தொடர்பான பொதுத் துறை நிறுவனங்களின் 3-வது கலந்தாய்வு மாநாடு, நேற்று (2026 ஜூலை 25) வதோதராவில் உள்ள கதி சக்தி விஸ்வவித்யாலயாவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்வானது, திறன் மேம்பாட்டுக் குழு, மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் துறை ஆகியவற்றால், கதி சக்தி விஸ்வவித்யாலயாவை, அறிவுசார் கூட்டாளராகக் கொண்டு கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாநாடு, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளை ஒன்றிணைத்தது. இது சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளவும், எதிர்காலப் பாதையை வகுக்கவும் வழிவகுத்தது. பொதுத்துறை நிறுவன சீர்திருத்த செயல்திட்டத்தை உருவாக்குவதில், திட்டமிடல், விரிவான திட்ட அறிக்கை, ஒப்பந்தம் செய்தல், நிலம் கையகப்படுத்துதல், சொத்து சுழற்சி மேலாண்மை, ஆழ்தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, பிரதமரின் கதிசக்தித் தளத்தைப் பயன்படுத்துவது ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.

இந்த மாநாட்டில் என்டிபிசி, கோல் இந்தியா, பாரத் கோக்கிங் கோல், பிபிசிஎல், ஹெச்பிசிஎல், இந்தியன் ஆயில், ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, எம்ஆர்பிஎல், கெயில், செயில், ஹிந்துஸ்தான் காப்பர், நால்கோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து மொத்தம் 39 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289628&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2289661) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी