சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா முழுவதும் டிஜிட்டல் நீதி மற்றும் சட்ட உதவி உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படுகின்றன

प्रविष्टि तिथि: 25 JUL 2026 8:49PM by PIB Chennai

ஒடிசா மாநிலத்தில் டிஜிட்டல் நீதி மற்றும் சட்ட சேவைகளை விரிவுபடுத்துவதற்காக மின்னணு நீதிமன்ற திட்டத்தின் 3-வது கட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் நிதியாண்டுகள்  2023-24 முதல் 2025-26 வரை மொத்தம் 2514.81 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில்  தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திற்கு 620 கோடி ரூபாயும்கிராம நியாயாலயா திட்டத்திற்கு 12.80 கோடி ரூபாயும், தொலைச்சட்டத் திட்டத்திற்கு 86.5  கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது

இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணுக் குழு வழங்கிய தகவலின்படி, ஒடிசா மாநிலத்தில் 16 மாவட்டங்களில் 16 மாற்றுச் சச்சரவுத் தீர்வு (ADR) மையங்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 14 மாவட்டங்களிலும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் அலுவலகத்தில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மக்களவையில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில், மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2289462&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2289603) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी