ஜல்சக்தி அமைச்சகம்
மழைநீர் சேகரிப்பு இயக்கத்தில் முன்னோடியாக விளங்கும் சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டம்
प्रविष्टि तिथि:
26 JUL 2026 1:55PM by PIB Chennai
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாடு தழுவிய மழைநீர் சேகரிப்பு (#CatchTheRain) இயக்க்கம் வேகம் பெற்று வருகிறது. நாடு முழுவதும் நீர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நீர் ஆதாரங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பருவமழை உதவுகிறது. இதில் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்காவ்ன் மாவட்டம் ஒரு முன்னோடியாக உருவெடுத்துள்ளது. திறன் வாய்ந்த நீர் சேமிப்பிற்குத் தயார்நிலையே அடித்தளம் என்பதை அது நிரூபித்துள்ளது. முன்னோடியான 'மிஷன் ஜல் ரக்ஷா' இயக்கத்தின் மூலம், அந்த மாவட்டம் அறிவியல் ரீதியான உள்கட்டமைப்பை உருவாக்கி, சமூகங்களைத் திரட்டி, புதுமையான முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், சாத்தியமான ஒவ்வொரு மழைத்துளியும் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, மீண்டும் நீர்நிலைகளுக்குள் திருப்பி விடப்படுவதை இந்த மாவட்டம் உறுதி செய்துள்ளது.
மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, ராஜ்நந்த்கான் மாவட்டம் ஒவ்வொரு துளியையும் சேகரித்து, பாதுகாத்து, நிலத்தடி நீராக வளப்படுத்தத் தனது நிலப்பரப்பைத் தயார் செய்துள்ளது. மழைநீர் வழிந்தோடிச் செல்ல அனுமதிக்கப்படாமல், விலைமதிப்பற்ற நிலத்தடி நீர் இருப்புகளை நிரப்புவதற்காக மீண்டும் பூமிக்குள் திருப்பிவிடப்படுவதை உறுதிசெய்யும் ஒரு அறிவியல் சமூகம் சார்ந்த கட்டமைப்பை மிஷன் ஜல் ரக்ஷா இயக்கத்தின் மூலம் இந்த மாவட்டம் உருவாக்கியுள்ளது.
நிலத்தடி நீர் செறிவூட்டலுக்காக புவியியல் தகவல் அமைப்பு வரைபடமாக்கல், தொலை உணர்வு, நீர்ப்படுகை வரைபடமாக்கல், டிஜிட்டல் மாதிரிகள், மலைத்தொடர் முதல் பள்ளத்தாக்கு வரையிலான திட்டமிடல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவியல் அணுகுமுறையானது, செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளை செறிவூட்டும் குழிகளாக மாற்றுதல், ஆழமான கிணறுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சிறு ஊடுருவல் தொட்டிகளைக் கட்டுதல் உள்ளிட்ட புதுமையான களச் செயல்பாடுகளால் இது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடினமான பாறை நிலப்பரப்புகளில்கூட மழைநீர் ஆழமான நீர்ப்படுகைகளைச் சென்றடைய உதவுகிறது.
மிஷன் ஜல் ரக்ஷா உண்மையிலேயே தனித்துவமாக்குவது, அது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்பதே. விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், கிராமப் பஞ்சாயத்துகள் ஆகியோர், விழிப்புணர்வு இயக்கங்கள் போன்ற முயற்சிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம், நீடித்த நீர் மேலாண்மைக்கு இது ஒரு உந்து சக்தியாக விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289584®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2289600)
आगंतुक पटल : 14