மத்திய பணியாளர் தேர்வாணையம்
பொறியியல் சேவைகள் (முதன்மை) தேர்வு, 2026
प्रविष्टि तिथि:
24 JUL 2026 7:01PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்இ) 21 ஜூன் 2026 அன்று நடத்திய பொறியியல் சேவைகள் (முதன்மை) தேர்வின், எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த விண்ணப்பதாரர்களின் தகுதி அனைத்து வகையிலும் தகுதியுடையவர்களாகக் கண்டறியப்படுவதற்கு உட்பட்டு தற்காலிக நடைமுறையாக இருக்கும். வயது, கல்வித் தகுதிகள், சமூகம், வரையறுக்கப்பட்ட இயலாமை (பொருந்தக்கூடிய இடங்களில்) போன்றவை தொடர்பான தங்களது விவரங்களை உறுதிப்படுத்தும் அசல் சான்றிதழ்கள் / ஆவணங்களை ஆளுமைத் தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, நேர்முக தேர்வில் கலந்துகொள்வதற்கு முன், தங்களது சான்றிதழ்கள்/ஆவணங்களை ஆயத்தமாக வைத்துக் கொள்ளவும், ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள முக்கிய அறிவுறுத்தல்களின் படி, தேவைப்படும் சான்றிதழ்கள் குறித்த விவரங்களை முன்கூட்டியே சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொறியியல் சேவைகள் தேர்வு, 2026-ன் முதன்மை/நிலை-II தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, நேர்காணலுக்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்கள் கொண்ட கால அவகாசத்தை ஆணையம் வழங்கும். பொறியியல் சேவைகள் தேர்வு, 2026-ம் ஆண்டிற்கான விதிகளின் விதி 6-ன் கீழ் உள்ள குறிப்பு 2-ன் படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவும், அதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை குறிப்பிட்ட தொகுதி/இணையதளப் பகுதியில் பதிவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அத்தகைய விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுடன், அவர்களின் விண்ணப்பதாரர் தகுதி ரத்து செய்யப்படக்கூடும். இதற்காக விண்ணப்பதாரர்கள் ஆணையத்தின் இணையதளத்தைத் தொடர்ந்து சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289098®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2289422)
आगंतुक पटल : 10