மாநிலங்களவைச் செயலகம்
மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் அறிமுகப் பயிற்சி
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2026 5:54PM by PIB Chennai
மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் அறிமுகப் பயிற்சி புதுதில்லியில் நாளை (25.07.2026) தொடங்குகிறது.
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இந்த இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். இதில் மாநிலங்களவையின் அனுபவம் வாய்ந்த தற்போதைய உறுப்பினர்களும் செயலகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்பார்கள். அவர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றம், குறிப்பாக மாநிலங்களவையின் நடைமுறைகள், செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுவார்கள் .
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில், மாநிலங்களவையின் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289020®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2289419)
வருகையாளர் எண்ணிக்கை : 32