தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குண்டூரில் நவீனமயமாக்கப்பட்ட மக்கள் தொடர்பு சேவைக்கான அஞ்சல் நிலையங்களை மத்திய இணை அமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 6:24PM by PIB Chennai

குண்டூரில் மக்கள் தொடர்பு சேவைத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட கோதாபேட்டா, சந்திரமௌலி நகர் துணை அஞ்சல் நிலையங்களை மத்திய தகவல் தொடர்பு, ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி இன்று தொடங்கி வைத்தார். அடுத்த தலைமுறை மக்கள் சேவை மையங்களாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அஞ்சல் நிலையங்கள், நவீன உள்கட்டமைப்பு வசதிகளையும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் இணைத்து, அஞ்சல், வங்கி, டிஜிட்டல், பார்சல் சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சந்திரசேகர், இந்திய அஞ்சலக துறையானது இனி கடிதங்களை விநியோகிக்கும் துறையாக செயல்படுவதுடன், மாறாக மக்களின் வாழ்க்கையை இணைக்கும், சமூகங்களை வலுப்படுத்தும், இந்தியாவின் டிஜிட்டல், பொருளாதார மாற்றத்தை முன்னெடுக்கும் ஒரு தேசிய நிறுவனம் என்று குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியாவின் வழிகாட்டுதலின் பேரில், அஞ்சல் துறை தனது 170 ஆண்டுகால வரலாற்றிலேயே, மிக விரிவான மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. இது உலகத்தரம் வாய்ந்த தளவாடங்கள், மின்னணு வர்த்தகம், நிதிச் சேவைகளுக்கான வலையமைப்பாக நிலைநிறுத்தி வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் 2.0, மேம்பட்ட அஞ்சலகத் தொழில்நுட்பம் 2.0 ஆகியவற்றின் கீழ், ரூ 5,785 கோடி முதலீட்டில், அஞ்சல் துறையில், நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டங்களில் ஒன்றை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக இணையமைச்சர் தெரிவித்தார். இத்திட்டம் செயற்கை நுண்ணறிவு, கிளவுட்  சார்ந்த தளங்கள், நிகழ்நேரத் தரவு ஆகியவற்றை நாடு முழுவதும் உள்ள 1.65 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சல் நிலையங்களின் வலையமைப்பில் ஒருங்கிணைக்கிறது; இதில் 90 சதவீத அஞ்சல் நிலையங்கள் கிராமப்புற இந்தியாவில் அமைந்துள்ளன. இந்த மாற்றம் விரைவான சேவை வழங்கல், நிகழ்நேர கண்காணிப்பு, மேம்பட்ட செயல்பாட்டுத் திறன், தடையற்ற வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றைச் சாத்தியமாக்குகிறது.

தலைமை தொழில்நுட்ப அதிகாரி, தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, துணை தொழில்நுட்ப அதிகாரி போன்ற முக்கிய பொறுப்பிற்கான பதவிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் 'இந்தியா போஸ்ட்' பெரு நிறுவன ரீதியிலான நிர்வாக நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ளதாக டாக்டர் சந்திரசேகர் கூறினார். தெளிவாக வரையறுக்கப்பட்ட வணிக இலக்குகள், மாதாந்திர செயல்திறன் மதிப்பாய்வுகள், பொறுப்புக்கூறல் கட்டமைப்புகள், வாடிக்கையாளரே முதன்மை என்ற அணுகுமுறை ஆகியவற்றின் மூலம், இத்துறை மக்கள், வணிகங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் சுறுசுறுப்பான, போட்டித்தன்மை வாய்ந்த, விரைவாகச் செயல்படும் அஞ்சலகங்கள் உருவெடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289061&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2289414) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu