சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரக்குப் போக்குவரத்தையும் விவசாயத்தையும் மாற்றியமைக்கும் கான்பூர்–கப்ராய் நெடுஞ்சாலை

प्रविष्टि तिथि: 25 JUL 2026 5:40PM by PIB Chennai

இந்த மாத தொடக்கத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கான்பூர்–கப்ராய் 4 வழி, 6 வழி அணுகல் - கட்டுப்பாட்டு நெடுஞ்சாலை, மத்திய இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் உள்கட்டமைப்புத் திட்டமாக உருவெடுக்க உள்ளது. சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ₹7,145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த 117.7 கி.மீ நீளமுள்ள புதிய நெடுஞ்சாலை, போபால்–கான்பூர் பொருளாதார வழித்தடத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.

புந்தேல்கண்டின் கனிம வளம் நிறைந்த பகுதிகள், தொழில்துறை மையங்கள், விவசாயப் பகுதிகளை முக்கிய நுகர்வு மையங்களுடன் தடையின்றி அது இணைக்கும். இதன் மூலம், இந்தத் திட்டம் சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தி, தொழில்துறை இணைப்பை மேம்படுத்தி, விவசாயிகளுக்கான சந்தை அணுகலை எளிதாக்கும். கனிமங்கள், உற்பத்திப் பொருட்கள், விவசாய விளைபொருட்களின் வேகமான, திறன் வாய்ந்த போக்குவரத்தை சாத்தியமாக்குவதன் மூலம், இந்த வழித்தடம் சரக்குப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைகத்து, விநியோகச் சங்கிலித் திறனை மேம்படுத்து, முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும்.

இது அனைவரையும் உள்ளடக்கிய பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு போக்குவரத்து வழித்தடம் என்பதை விட மேலாக, சுரங்கங்களைச் சந்தைகளுடன் இணைப்பதிலும் புந்தேல்கண்டின் பொருளாதார ஆற்றலை வெளிக்கொணர்வதிலும் ஒரு முக்கிய திட்டமாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289391&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2289413) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी