ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மழைநீர் சேகரிப்பு இயக்கத்தின் கீழ், ஆந்திர மாநிலத்தில் நீர் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகள், நீர் சேமிப்புத் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 25 JUL 2026 2:36PM by PIB Chennai

மழைநீர் சேகரிப்பு இயக்கம் (4 ஜூலை–4 ஆகஸ்ட் 2026) ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுத்தல், துணை கால்வாய்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுதல், குளங்களைப் புனரமைத்தல்,  கூடுதல் நீர் சேமிப்பு வசதிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிப்பதே இதன் நோக்கமாகும். மழை பெய்யும் பகுதிகளில், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் பின்பற்றி, பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

அறிவியல் ரீதியிலானத்  திட்டமிடல், சமூகப் பங்கேற்பு, ஒருங்கிணைந்த செயலாக்கம் ஆகியவற்றின் மூலம், இந்த மாவட்டம், நீர் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, பருவமழை காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரைச் சேகரித்துச் சேமிக்கும் திறனை மேம்படுத்துகிறது.

அனைத்து 489 கிராமப் பஞ்சாயத்துகளிலும் கள ஆய்வுகள், முன்னுரிமை நீர்நிலைகள், துணை நீர்வழிகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகளை வரைபடமாக்குதல், சம்பந்தப்பட்ட துறைகளால் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் ஆகியவற்றின் மூலம், அறிவியல் ரீதியிலான திட்டமிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

உள்ளூர் சமூகங்கள், கிராமப்புறத்தில் அனுபவம் மிக்க பெரியோர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு, உள்ளூர் தேவைகள், பாரம்பரிய அறிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய செயல்திட்டங்கள் குறித்து அடையாளம் காண உதவுகின்றன. முன்மொழியப்பட்ட பணிகள், வெளிப்படைத்தன்மை, சமூகப் பங்கேற்பை உறுதி செய்வதற்காக, கிராம சபைக் கூட்டங்களில் இது குறித்து விவாதிக்கப்படுகின்றன.

இந்த அறிவியல் ரீதியிலான திட்டமிடல், பங்கேற்பு செயல்முறையின் அடிப்படையில், இந்த மாவட்ட நிர்வாகம், 2,103 நீர் பாதுகாப்புப் பணிகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கு அனுமதி வழங்கி, பணிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் 100% பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவு செய்யப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர் சேமிப்பு ஆகிய வள ஆதாரங்களை உயர்த்தும் வகையில் உத்திசார் ரீதியில்த் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் சேகரிப்பு  இயக்கத்தின் நோக்கங்கள் வலுப்படுத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289321&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2289336) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Telugu