நிதி அமைச்சகம்
167-வது வருமான வரி தினக் கொண்டாட்டம்: பொறுப்புணர்வுடன் கூடிய வரி நிர்வாகத்திற்கான '5 ஆர்' கோட்பாடுகளை வலியுறுத்தினார் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
प्रविष्टि तिथि:
24 JUL 2026 9:23PM by PIB Chennai
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) சார்பாக புது தில்லியில் இன்று நடைபெற்ற 167-வது வருமான வரி தினக் கொண்டாட்டங்களில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். வருவாய்த் துறை செயலாளர் திரு அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் திரு ரவி அகர்வால், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் (சிபிஐசி) தலைவர் திரு விவேக் சதுர்வேதி ஆகியோருடன் சிபிடிடி மற்றும் சிபிஐசி உறுப்பினர்கள் மற்றும் துறையின் பிற மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், வருமான வரித் துறையின் பங்கு என்பது வெறும் வரி வசூலிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், நியாயமான, திறமையான, வெளிப்படையான மற்றும் வரி செலுத்துவோரை மையமாகக் கொண்ட ஒரு வரி நிர்வாகத்தை உருவாக்குவதாக மாறியுள்ளது என்று கூறினார். வருமான வரிச் சட்டம், 2025-ஐ அமல்படுத்தியதை ஒரு முக்கிய சீர்திருத்தமாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சட்டம், சட்ட நடைமுறைகளை எளிமையாக்கியுள்ளதாகவும், விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செலவுகளைக் குறைத்துள்ளதாகவும், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் எளிதாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். வரி செலுத்துவோர் சேவைக்கான வழிகாட்டும் கொள்கைகளாக, பொறுப்புமிக்க வரி நிர்வாகத்தின் 5 ஆர் (5R)-களாக அங்கீகரித்தல் (Recognise , பதிலளித்தல் (Respond), குறை தீர்த்தல் (Redress), பிரதிபலித்தல் (Reflect) மற்றும் சீர்திருத்தம் (Reform) ஆகியவற்றை அவர் கோடிட்டுக் காட்டினார்.
நவீன உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மனித மூலதனத்தில் தொடர்ச்சியான முதலீடு ஆகியவற்றின் மூலம் நிறுவனத் திறனை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் நிதியமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அலுவலகங்கள் மற்றும் நலத்திட்டங்களை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய அவர், செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, தடயவியல் கணக்கியல், சர்வதேச வரிவிதிப்பு, பரிமாற்ற விலை நிர்ணயம், டிஜிட்டல் சொத்துக்கள், இணையப் பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவ மேம்பாடு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் அதிக திறன் மேம்பாட்டிற்கு அழைப்பு விடுத்தார். தன்னார்வ இணக்கத்தை ஆழப்படுத்தவும், வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேலும் எளிமையாக்கவும், வரி உறுதித்தன்மையை வலுப்படுத்தவும், தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்தவும், பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார். வணிகம் செய்வதை எளிதாக்குவதிலும், வரி செலுத்துவோரின் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் இந்தத் துறை தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289220®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2289248)
आगंतुक पटल : 7