விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:59PM by PIB Chennai

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதியுதவித் திட்டமான இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்திற்கு (NMNF) மத்திய அமைச்சரவை 2024 நவம்பர் 25 அன்று ஒப்புதல் அளித்தது. இயற்கை விவசாயம் என்பது இந்திய பாரம்பரிய ஞானத்தில் வேரூன்றிய, கால்நடைகளை ஒருங்கிணைத்த இயற்கை விவசாய முறைகள் மற்றும் பல்வகை பயிர் சாகுபடி முறைகளை உள்ளடக்கிய, ரசாயனப் பயன்பாடற்ற விவசாய முறையாகும். இயற்கை விவசாயம், மண், நீர், நுண்ணுயிர்த்தொகுதி, தாவரங்கள், விலங்குகள், காலநிலை மற்றும் மனித தேவைகள் ஆகியவற்றுக்கு இடையேயான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையை அங்கீகரிக்கிறது.

 

இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1032116.452 ஹெக்டேர் நிலப்பரப்பில் 18893 தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 2092657 விவசாயிகள் இதில் இணைந்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 2708.912 ஹெக்டேர் நிலப்பரப்பில் 60 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 6072 விவசாயிகள் சேர்ந்துள்ளனர். புதுச்சேரியில்  256.252 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள  6 தொகுப்புகளில்  772 பேர் இணைந்துள்ளனர்.

 

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர், மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,  இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289030&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2289236) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी