கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல்சார் துறையில் வேலைவாய்ப்புகள்
प्रविष्टि तिथि:
24 JUL 2026 4:51PM by PIB Chennai
கடல்சார் துறையில் வேலைவாய்ப்புகளை வலுப்படுத்த, திறன் மேம்பாட்டிற்கான பலமுனை உத்தியை அரசு மேற்கொண்டுள்ளது. சான்றிதழ் பெறுவதற்கும் தொழில் வளர்ச்சியடைவதற்கும் கப்பலில் வழங்கப்படும் கடல்சார் பயிற்சி அவசியமான ஒன்றாகும். எனவே, பயிற்சித் திறனை அதிகரித்தல், இத்துறையில் நிறுவனங்களின் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் கூடுதல் கப்பல்சார் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய கடல்சார் பயிற்சி பெறுநர்களின் வேலைவாய்ப்புத் திறன் மேம்படுத்தப்படுவதோடு, கடல்சார் பணியாளர்களின் நீண்டகால வளர்ச்சியும் ஆதரிக்கப்படுகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் பயணிகள் கப்பலான 'எம்வி ஸ்வராஜ் த்வீப்' -ல், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உடன் இணைந்து 96 பயிற்சி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க, 'தேசிய நீர்வழிகள் சட்டம், 2016'-இன் கீழ் நாட்டில் 111 தேசிய நீர்வழிகளை (ஏற்கனவே இருந்த 5 மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 106) அரசு அறிவித்தது.
இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288922=48&lang=1
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2289213)
आगंतुक पटल : 8