ஊரக வளர்ச்சி அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதார இயக்கம் : தமிழகத்திற்கு ரூ.7,585 கோடி நிதி இடைக்கால ஒதுக்கீடு!
प्रविष्टि तिथि:
24 JUL 2026 5:39PM by PIB Chennai
‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதார இயக்கம்’ திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு இடைக்கால ஒதுக்கீடாக மொத்தம் ரூ.7,585.49 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாகக் கடந்த 2026 ஜூலை 1 முதல் இப்புதிய திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் விடுவிக்கப்பட்டத் தொகை குறித்த விவரங்களை மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் கமலேஷ் பஸ்வான் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்தார்.
தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடைக்கால நிதியான ரூ.7,585.49 கோடியில், முதற்கட்டமாக ரூ.2,176.84 கோடி நிதி விடுவிப்பதற்கான முதன்மை ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதேபோல், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.40.56 கோடி இடைக்கால நிதி ஒதுக்கப்பட்டதில், முதற்கட்டமாக ரூ.12.88 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2026 ஜூலை 16 அன்றைய நிலவரப்படி நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ.93,841.69 கோடி இடைக்கால நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ரூ.25,495.32 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
சமூகத் தணிக்கை மற்றும் மத்திய நிர்வாகச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1,850.62 கோடியையும் சேர்த்து, நடப்பு 2026-27 நிதியாண்டில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் ரூ.95,692.31 கோடி நிதி இத்திட்டத்திற்காகக் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288990®=3&lang=1
செய்தி அடையாள எண் 2288990
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2289212)
आगंतुक पटल : 9