சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் இளநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 1.29 லட்சமாகவும், முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 86,360 ஆகவும் உயர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2026 3:51PM by PIB Chennai

தேசிய மருத்துவ ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, 2023-24 கல்வியாண்டில் 1,09,115-ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 2025-26 கல்வியாண்டில் 1,28,976-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், முதுநிலை மருத்து இடங்களின் எண்ணிக்கை 31,185-லிருந்து 86,360-ஆக உயர்ந்துள்ளது.

இந்திய மருத்துவப் பதிவேட்டின் தரவுகளின்படி, நாட்டில் தற்போது 15,35,155 அலோபதி மருத்துவர்களும், ஆயுஷ் மருத்துவ முறையில் 7,51,768 மருத்துவப் பயிற்சியாளர்களும் பதிவு செய்துள்ளனர். அலோபதி மற்றும் ஆயுஷ் முறைகளில் பதிவுசெய்த மருத்துவப் பயிற்சியாளர்களில் 80 சதவீதம் பேர் சேவையில் இருப்பதாகக் கொண்டால், நாட்டில் மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் 1:778 ஆக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜெ.பி. நட்டா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

****

TV/EA/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2289189) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati