ஜவுளித்துறை அமைச்சகம்
நகர்ப்புற கைவினைப் பொருட்கள் சந்தைத் திட்டத்தின் முன்னேற்றம்
प्रविष्टि तिथि:
24 JUL 2026 2:50PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினைப் பொருட்கள் துணை இயக்குநரகம், கைத்தறிப் பொருட்கள் துணை இயக்குநரகம் ஆகியவை தேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டத்தையும் , தேசிய கைத்தறிப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள், கைவினைஞர்களும் நெசவாளர்களும் தங்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன. நகர்ப்புற கைவினைப் பொருட்கள், சந்தைத் திட்டத்தில் இதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் தற்போது 28 நகர்ப்புற கைவினைப் பொருட்கள் சந்தைகள் உள்ளன. இவற்றில் 3 சந்தைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2288810)
SS/PLM/KPG/SH
(रिलीज़ आईडी: 2289162)
आगंतुक पटल : 7