சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதார ஆராய்ச்சித்துறைக்கான வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு 5 மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பு: 2026-27 நிதியாண்டில் ₹4,821.21 கோடி ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
24 JUL 2026 3:56PM by PIB Chennai
நாட்டின் சுகாதார ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு எடுத்துள்ள நிதியுதவி மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து மக்களவையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2014-15 நிதியாண்டில் வெறும் ₹932 கோடியாக இருந்த சுகாதார ஆராய்ச்சித் துறையின் (DHR) வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, தற்போது 5 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து 2026-27 நிதியாண்டில் ₹4,821.21 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த 2025-26 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ₹3,900.69 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 24 சதவீத உயர்வாகும்.
மருத்துவ ஆராய்ச்சிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தனது நிதியுதவி கட்டமைப்பை மறுசீரமைத்து விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி சிறிய அளவிலான ஆராய்ச்சிகளுக்கு அன்வேஷன் திட்டத்தின் கீழ் ₹2 கோடி வரையிலும், நடுத்தர அளவிலான ஆராய்ச்சிகளுக்கு நிச்சயக் அன்வேஷன் திட்டத்தின் கீழ் ₹2 கோடி முதல் ₹8 கோடி வரையிலும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் உலகளவிலான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் 'ஃபர்ஸ்ட்-இன்-தி-வேர்ல்ட்' திட்டத்திற்கு ₹8 கோடி வரையிலும், அதிநவீன உயர் ஆராய்ச்சி மையங்களுக்கு ₹15 கோடி வரையிலும் மானியம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இத்தகைய கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் மூலம் சென்னை ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் மற்றும் ஜிப்மர் போன்ற தென்னிந்தியாவின் முதன்மை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிதும் பயனடைந்து புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகவலைச் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288852®=48&lang=1
****
TV/NB/SH
(रिलीज़ आईडी: 2289160)
आगंतुक पटल : 7