எரிசக்தி அமைச்சகம்
மின்துறை அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் – மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
24 JUL 2026 5:24PM by PIB Chennai
மின்துறை அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவின் கூட்டம் மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் புதுதில்லியில் நேற்று (23.07.2026) நடைபெற்றது. இதில் மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சேவைத் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய திரு மனோகர் லால் மின்சாரச் சட்டம் 2003, மின் உற்பத்தி, பகிர்மானம், வர்த்தகம் ஆகியவற்றில் போட்டித் தன்மையை அதிகரித்துள்ளதாகக் கூறினார். நுகர்வோருக்கு தடையற்ற மின் விநியோகத்தைக் குறைந்த செலவில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மின் விநியோகக் கட்டமைப்புத் தொடர்பாகவும் நடைமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், குழுவில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மின்துறை அமைச்சகத்தின் செயலாளர், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288973®=3&lang=1
****
TV/PLM/KPG/SH
(रिलीज़ आईडी: 2289113)
आगंतुक पटल : 11