அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மின்னேற்றம் செய்யும் வகையிலான துத்தநாக - காற்று பேட்டரிகள் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு; தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சாதனை

प्रविष्टि तिथि: 24 JUL 2026 2:50PM by PIB Chennai

மின்சாரத்தின் மூலமாக இயங்கக் கூடிய அதே சமயம் மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய துத்தநாக – காற்று  பேட்டரிகளின் கேத்தோடு திறனை அதிகரிக்கும் புதிய நானோ ப்ளூயிட் எலக்ட்ரோலைட்டை  விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது மிகவும் சிறப்பான, பாதுகாப்பான, குறைந்த செலவிலான அடுத்த தலைமுறை பசுமை பேட்டரிகள் உற்பத்திக்கு வழிவகை செய்யும்.

இது அதிக மின்சேமிப்புக்கும் மின்சார வாகன போக்குவரத்து வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக அமையும். வழக்கமாக துத்தநாக அரிப்பைத் தடுக்க விலை உயர்ந்த நடைமுறைகள் பயன்படுத்தப்படும். ஆனால் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த சவாலுக்குத் தீர்வு கண்டுள்ளனர். அவர்கள் விலை மலிவான நானோ ப்ளூயிட் எலக்ட்ரோலைட்டை உருவாக்கியுள்ளனர். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது வெற்றிகரமாக தீர்வு கண்டறியப்பட்டு இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இது தற்போது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288811&reg=48&lang=1

****

TV/PLM/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2289094) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी