ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித்துறையின் வர்த்தகத் தயார் நிலை மற்றும் ஏற்றுமதி போட்டித் திறன்
प्रविष्टि तिथि:
24 JUL 2026 2:48PM by PIB Chennai
நாட்டின் ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதி 2024-25-ம் ஆண்டில் 3,19,573 கோடி ரூபாயாக இருந்தது. இது 2025-26-ம் ஆண்டில் 3,25,339 கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்திய ஜவுளிகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஜவுளி, ஆயத்த ஆடை ஆகியவற்றின் போட்டித் திறனையும் ஏற்றுமதியையும் மேம்படுத்த அரசு பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பிரதமரின் மித்ரா பூங்கா திட்டம், ஜவுளித்துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், ஜவுளித்துறையில் திறன் மேம்பாட்டிற்கான சமர்த் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
ஜவுளித்துறையின் வளர்ச்சி அதிகரிக்க ஜவுளி அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் ஜவுளி உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. நாட்டின் ஜவுளி உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரிக்கும் நோக்கில் பாரத் டெக்ஸ் சர்வதேச ஜவுளிக் கண்காட்சியை ஜூலை 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மத்திய அரசு தில்லியில் நடத்தியது. அரசின் நடவடிக்கைகள் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க உதவியுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288808®=48&lang=1
----
TV/PLM/GS/KR
(रिलीज़ आईडी: 2288938)
आगंतुक पटल : 9