பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2 லட்சம் அங்கன்வாடிகளைத் திறன் அங்கன்வாடிகளாக தரம் உயர்த்த ஒப்புதல்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 2:00PM by PIB Chennai

ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் களையும் வகையில் திறன் அங்கன்வாடி (சக்ஷம் அங்கன்வாடி) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்படும் திட்டமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகம் உள்ள பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் இணைந்து ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் நெறிமுறைகளை உருவாக்கி அதை செயல்படுத்தி வருகின்றன.

இதில் திறன் அங்கன்வாடி திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறுவார்கள். மேம்பட்ட ஊட்டச்சத்தை வழங்குவதற்கும் சிறந்த குழந்தைப் பராமரிப்புக்கும் உதவும் வகையில் இரண்டு லட்சம் அங்கன்வாடி மையங்களைத் திறன் அங்கன்வாடி மையங்களாகத் தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அங்கன்வாடி மையங்களில் எல்இடி திரைகள், நீர்சுத்திகரிப்பு அமைப்புகள், ஊட்டச்சத்துப் பூங்காக்கள், குழந்தைப் பராமரிப்புக்கான வசதிகள், குழந்தைகளின் கல்விக்கான உபகரண வசதிகள் ஆகியவை சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன்  அமைக்கப்படும்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் இத்தகவலை தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288795&reg=48&lang=1

 

---

TV/PLM/SM/KR


(रिलीज़ आईडी: 2288861) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu