மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவைத் தலைவர் ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 23 JUL 2026 2:01PM by PIB Chennai

அவைத்தலைவர்:  மாண்புமிகு உறுப்பினர்களே, அசாம், அருணாச்சலப்பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், கேரளம், மிசோரம், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மாநிலங்களில் 2026 ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு, மின்னல், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பலர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்டனர் என்பது நீங்கள் அனைவரும் அறிந்தது.

இந்நிகழ்வுகள், சொத்து, பயிர்கள், பொது உள்கட்டமைப்புக்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. இப்பிராந்தியங்களில், தாவரங்களும், விலங்குகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்களின் ஆதரவுடன், சம்பந்தப்பட்ட அரசுகள், மீட்பு  மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழப்பு மற்றும் மக்களுக்கு காயம் ஏற்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது.

எனவே என்னுடன் இணைந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் இரக்கத்தையும் இந்த அரசு தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து மறுவாழ்வு பெற பிரார்த்திக்கிறோம்.  உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இயற்கைப் பேரிடர்களால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288251&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2288681) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati