புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி, 2026 நவம்பர் 2 முதல் 5 வரை புதுதில்லியில் நடைபெறும்: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி
प्रविष्टि तिथि:
23 JUL 2026 7:23PM by PIB Chennai
புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இன்று (23.07.2026) தில்லியில் நடைபெற்ற பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2026 அறிமுக விழாவில் உரையாற்றினார். பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி (பிரேஸ் - BRESE) 2026, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2026 நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் திரு ஜோஷி கூறினார்.
இந்த உச்சிமாநாடு, முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், மின்கல சேமிப்பு நிறுவனங்கள், பசுமை ஹைட்ரஜன் முன்னோடிகள், நிதி நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, முழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மதிப்புச் சங்கிலியையும் ஒரே குடையின் கீழ் இணைக்கும் என்று திரு பிரல்ஹாத் ஜோஷி மேலும் தெரிவித்தார்.
அறிமுக நிகழ்ச்சியில், பல்வேறு தேசிய, சர்வதேசப் பிரதிநிதிகளும், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288509®=3&lang=1
(Release ID : 2288509)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288655)
आगंतुक पटल : 11