வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புற சவால் நிதிக்கான வழிகாட்டுதல்கள்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 7:18PM by PIB Chennai
வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகர்ப்புற சவால் நிதிக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை 2026 ஏப்ரல் 15 அன்று வெளியிட்டுள்ளது. இந்தத் திட்ட வழிகாட்டுதல்கள் தளத்தில் உள்ளன. அவற்றை https://www.mohua.gov.in/static/uploads/2026/04/7950afb9b2d5cb773ba3d6c64bde9726.pdf என்ற இணையதள முகவரியில் அணுகலாம்.
நகரங்களைச் சந்தை அடிப்படையிலான நிதியளிப்பு, ஒருங்கிணைந்த பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி மாறுவதற்கு ஊக்குவிப்பதன் மூலம், நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி மாற்றத்தைத் தூண்டுவதற்காக இந்த நிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலக்குடன் கூடிய சீர்திருத்தங்கள், வலுப்படுத்தப்பட்ட நிறுவனத் திறன், மேம்படுத்தப்பட்ட ஆளுகை, திட்டமிடல் கட்டமைப்புகள், நிலையான வருவாய் ஈட்டும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம், நகரங்களை வங்கிகளால் நிதியளிக்கக்கூடிய ஒரு சொத்து வகையாக நிலைநிறுத்துவதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288504®=3&lang=1
(Release ID : 2288504)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288652)
आगंतुक पटल : 9