பாதுகாப்பு அமைச்சகம்
கொச்சியில் நடைபெற்ற 4 நாள் சர்வதேச கடல்சார் பயிற்சி நிறைவு பெற்றது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 7:25PM by PIB Chennai
இந்தியக் கடற்படை சார்பாக நான்கு நாட்கள் நடைபெற்ற பன்னாட்டு கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியான 'ஆபரேஷன் சதர்ன் ரெடினஸ் 26-2', இன்று கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைத் தளத்தில் நிறைவடைந்தது. தெற்கு கடற்படைத் தளம் மற்றும் இந்திய கடற்படை தலைமையிலான கூட்டுப்படை 154 ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ், ஒருங்கிணைந்த கடல்சார் படைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், 27 நாடுகளைச் சேர்ந்த 276 வீரர்கள், 76 பயிற்றுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்தனர். மேலும், நான்கு சர்வதேச அமைப்புகளும் இதில் பங்கேற்றன.
தெற்கு கடற்படைத் தலைமையகத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரி (பயிற்சி) ரியர் அட்மிரல் தீபக் சிங்கால், கூட்டு கடல்சார் படைகளின் துணைத் தளபதி கமோடோர் டான் தாமஸ், மூத்த அதிகாரிகள் மற்றும் பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஜூலை 20, அன்று இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில், கூட்டுப்படை 154-ன் தளபதி கமோடோர் மிலிந்த் எம். மோகாஷி, ரியர் அட்மிரல் தீபக் சிங்கால் ஆகியோர் நிறைவுரை ஆற்றினர். மேலும், விழாவில், ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, பங்கேற்ற நாடுகளிடையே ஒருங்கிணைந்து செயல்படும் திறன், தொழில்முறை இணைப்புகள் மற்றும் செயல்பாட்டு ரீதியான தன்னம்பிக்கை ஆகியவற்றை வலுப்படுத்தியது. கோட்பாட்டு ரீதியான புரிதலை நேரடிப் பயிற்சியுடன் இணைப்பதன் மூலம், பிராந்திய அளவிலான திறன் மேம்பாட்டிற்கும் கூட்டு கடல்சார் பாதுகாப்பிற்கும் இது பங்களித்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் மொத்தம் 3,800 மனித-மணிநேரப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சதர்ன் ரெடினஸ் 26-2, இந்தியக் கடற்படையின் நவீன பயிற்சி உள்கட்டமைப்பு, அதிநவீன சிமுலேட்டர்கள், மேம்பட்ட பயிற்றுவிப்பு வழிமுறைகள் மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288511®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2288632)
आगंतुक पटल : 7