கலாசாரத்துறை அமைச்சகம்
காசி, அயோத்தி, மதுரா பகுதிகளில் உள்ள ஆன்மீக வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:54PM by PIB Chennai
காசி, அயோத்தி, மதுரா ஆகிய பகுதிகளில் உள்ள ஆன்மீக வழித்தடங்களில் உள்கட்டமைப்பு, மேம்பாட்டுப் பணிகள் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் புனித யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மீக வளர்ச்சி இயக்கம் (பிரசாத்) தேசிய சுற்றுலா இயக்கம், சவால் அடிப்படையிலான பகுதி மேம்பாடு, மத்திய அரசு முகமைகளுக்கான உதவி, மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டம் ஆகியவை அடங்கும்.
காசியில் மேம்பாட்டுப் பணிகள் (முதலாவது, இரண்டாவது கட்டம்)
கங்கையில், படகு சுற்றுலா சேவையை மேம்படுத்துதல், தஷாஷ்வமேத் மலைக்கணவாய் முதல் தர்பங்கா மலைக்கணவாய் வரை, துளசி மானஸ் மந்திர், சாரநாத் அருங்காட்சியகம், தாம்கே ஸ்தூபி, சவுக்கண்டி ஸ்தூபி, லால்கான் கல்லறை, மான்மகால் உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள், பாரம்பரியத் தலங்களில் அலங்கார மின்விளக்குகள் அமைத்தல் பணிகள் நடைபெற்றுள்ளன. அயோத்தியில் ராமாயணா சுற்றுப்பாதை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரா - பிருந்தாவனில் சுற்றுலாப் பயணிகளுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரா பிருந்தாவனம் இடையேயான பகுதி பிரம்மாண்ட சுற்றுலாப் பகுதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கோவர்தன் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மாநிலங்களவையில் இன்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288289®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2288544)
आगंतुक पटल : 9