அணுசக்தி அமைச்சகம்
உலகிலேயே முதன்முறையாக அணுக்கரு வெப்பத்தின் மூலம் தூய்மையான ஹைட்ரஜன் உற்பத்தி செய்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் சாதனை: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:57PM by PIB Chennai
கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி, உலகிலேயே முதல்முறையாக அணுக்கரு வெப்பத்தின் மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி செய்து கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் சாதனை படைத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவின் தேசியப் பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்குப் பெரும் பங்காற்றும் எனக் கூறினார். கல்பாக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள அடுத்தக்கட்ட அணு உலைகளிலும் ஹைட்ரஜன் உற்பத்தி வசதி அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார். இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், இந்த மையம் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கிய மாதிரி அதிவேக அணு உலை 2026 ஏப்ரல் 6-ம் தேதியன்று தனது முதல் செயல்பாட்டை வெற்றிகரமாக எட்டியுள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்திற்கான வடிவமைப்பு, ஆய்வு, சோதனை, பாதுகாப்பு மதிப்பீடுகள் என அனைத்துத் தொழில்நுட்ப உதவிகளையும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் வழங்கியுள்ளதாகக் கூறினார். இந்தியத் தொழிற்துறை அமைப்புகளுடன் இணைந்து அணுமின் உலையின் 90 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்பாக்கத்தில் உள்ள காமினி அணு உலைக்கான எரிபொருள் பயன்பாட்டில் தோரியம் தொழில்நுட்பத்தை மேம்படுத்திப் பயன்படுத்தியதில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் முக்கியப் பங்காற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288295®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2288539)
आगंतुक पटल : 9