இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சுமார் ஒரு லட்சம் இளைஞர்கள் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்தில் பயன்பெற மை பாரத் தளம் வழிவகை செய்துள்ளது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 4:23PM by PIB Chennai
இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், தொழில்துறைப் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இளைஞர் நலன் துறை, 'மேரா யுவ பாரத்' (MY Bharat) எனப்படும் மை பாரத் தளத்தின் மூலம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து, பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கான (பிஎம்ஐஎஸ்) விழிப்புணர்வை அதிகரிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, மை பாரத் தளத்தில் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் (பிஎம்ஐஎஸ்) பிரத்யேக தன்னார்வ வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், பதிவு செய்து விண்ணப்பத்திற்காகவும் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்ட (பிஎம்ஐஎஸ்) இணைய தளத்தைத் தடையின்றி அணுக முடியும்.
இதில் நாடு முழுவதிலுமிருந்து இளைஞர்களின் பங்கேற்பு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. 16.07.2026 வரை, மை பாரத் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பிஎம்ஐஎஸ் தன்னார்வ வாய்ப்பின் மூலம், விண்ணப்பப் பதிவுக்காக மொத்தம் 98,632 இளைஞர்கள் பிஎம்ஐஎஸ் இணையதளத்திற்கு வழிமாற்றப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288320®=3&lang=1
(Release ID : 2288320)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288528)
आगंतुक पटल : 9