அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அனுசந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 23 JUL 2026 4:06PM by PIB Chennai

மத்திய அமைச்சரவை, அனுசந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏஎன்ஆர்எஃப்) கீழ் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்க (ஆர்டிஐ - RDI) நிதியத்துக்கு 1 ஜூலை 2025 அன்று ஒப்புதல் அளித்தது. இந்த நிதியமானது பிரதமரால் 3 நவம்பர் 2025 அன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

 

2026-ம் நிதியாண்டில், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம் ஆகியவை இரண்டாம் நிலை நிதி மேலாளர்களாக அங்கீகரிக்கப்பட்டன. மேலும், தகுதியான தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, மார்ச் 2026-ல் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்துக்கு ₹500 கோடி வழங்கப்பட்டது.

 

இந்த நிதியத்தின் கீழ் இணைவதற்காக இரண்டாம் நிலை நிதி மேலாளர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.  மொத்தம் 162 விண்ணப்பங்களும், சிறப்பு ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து 38 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது தகுதிவாய்ந்த ஒப்புதல் வழங்கும் அதிகாரியால் பரிசீலனையில் உள்ளன. இதில், பல்வேறு மாற்று முதலீட்டு நிதிகளுக்கும் சிறப்பு ஆராய்ச்சி நிறுவனங்களுக்குமாக சுமார் ₹8,000 கோடி மதிப்பிலான மொத்த முன்மொழியப்பட்ட நிதி ஒதுக்கீடு அடங்கும்.

 

அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288307&reg=3&lang=1

(Release ID : 2288307)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2288516) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी