புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் மொத்த புதுபிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 22 JUL 2026 2:29PM by PIB Chennai

நாட்டின் எரிசக்தி உற்பத்தித்திறன் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

சர்வதேச எரிசக்தி உற்பத்திக்கான சூழல் அமைப்பு, உலகளவிலான கப்பல், விமான போக்குவரத்துக்கான எரிபொருள் தொடர்பான புள்ளிவிவரங்கள் எரிசக்தி உற்பத்திக்கான கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.

நிலக்கரி, மின்உற்பத்தி திறன் இடையே உள்ள இடைவெளிகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் 37,936 பெட்டாஜூல்களாக இருந்த நாட்டின் மொத்த எரிசக்தி விநியோகம் 2024-25-ம் ஆண்டில் 39,055 பெட்டாஜூல்களாக அதிகரித்துள்ளது. 2024 மார்ச் 31-ம் தேதி 21,09,655 மெகா வாட்டாக இருந்த மொத்த புதுபிக்கத்தக்க எரிசக்தித் திறன் 2025 மார்ச் 31-ம் தேதி 47,04,043 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் எரிசக்திதிறன் குறித்த புள்ளிவிவரங்கள் கொள்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள், போன்றவற்றின் திட்டமிடல் பணிக்காக அனைத்து அமைச்சகங்களிடமும் பகிரப்பட்டு வருகிறது. மின் உற்பத்தியில் பொருத்தமான கொள்கை முடிவுகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த தரவுகள் பகிரப்பட்டு வருகின்றன.  மேலும் இதர பயனாளர்கள், துறைசார்ந்த ஆராய்ச்சியாளர்களின் பகுப்பாய்விற்காக இந்தத் தரவுகள் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மக்களவையில் இன்று மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்திர்ஜித் சிங் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287621&reg=3&lang=1

***

(Release ID: 2287621)

SS/SV/SM/SH

 


(रिलीज़ आईडी: 2288102) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी