கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'தேசிய கூட்டுறவு கொள்கை, 2025 கண்காணிப்பு நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 5:23PM by PIB Chennai

நாட்டின் கூட்டுறவுத் துறையைச் சீரான முறையில் வளர்க்கும் நோக்கில் 'தேசிய கூட்டுறவு கொள்கை, 2025' செயல்படுத்தப்பட்டுள்ளது. இக்கொள்கையைச் சிறப்பாகக் கண்காணிக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் 'தேசிய வழிகாட்டுதல் குழுவும்', கூட்டுறவுத்துறை செயலாளர் தலைமையில் 'கொள்கை அமலாக்க மற்றும் கண்காணிப்புக் குழுவும்' உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும், தேசியக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

 

இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களை அடுத்த பத்தாண்டுகளில் மிகவும் வலுவானதாகவும், லாபகரமானதாகவும் மாற்ற மத்திய அரசு ஒரு புதிய கொள்கையை வகுத்துள்ளது.

இதற்கிடையே, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் 'தேசிய கூட்டுறவு தரவுத்தளம்' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட பொருளாதாரத் துறைகளைச் சேர்ந்த 8.5 லட்சத்துக்கும் அதிகமான கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் 30 கோடி உறுப்பினர்களின் விவரங்கள் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

 

புதிய தொடக்க வேளாண்மைக் கூட்டுட்டுக் கடன் சங்கங்கள் பால் மற்றும் மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பைக் கணக்கிடுவதற்கும் இந்தத் தரவுத்தளம் மிகவும் உறுதுணையாக உள்ளது.

 

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதில் ஒன்றில் உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287789&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2287789

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2288085) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी