பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த 'மிஷன் வாத்ஸல்யா' இணையதளத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 22 JUL 2026 4:04PM by PIB Chennai

ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை ஆதரிப்பதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமே 'மிஷன் வாத்ஸல்யா'.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒருங்கிணைந்த 'மிஷன் வாத்ஸல்யா' இணையதளத்தை உருவாக்கியுள்ளது. காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளுக்கான 'டிராக் சைல்ட்'  இணையதளம் மற்றும் 'கோயா-பாயா' (Khoya-Paya) செயலி ஆகியவை இத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலைப்பின்னல் அமைப்புடன்' இது இணைக்கப்பட்டுள்ளதால், முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில் காணாமல் போன குழந்தைகளை மாநிலக் காவல்துறை எளிதில் கண்டறியும். பொதுமக்கள் 'கோயா-பாயா' பிரிவு மூலம் காணாமல் போன குழந்தைகள் பற்றித் தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தைகளைத் தாயகம் திருப்பியனுப்பும் 'கர்' இணையதளமும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி. சாவித்திரி தாகூர் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287687&reg=3&lang=1

 

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2288072) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी