பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி உதவிச் சேவை அறிமுகம்: மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUL 2026 4:09PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளிலும் 'மேதா ஏஐ' எனும் டிஜிட்டல் தளம் இரண்டு ஆண்டுத் திட்டமாக 2026 ஜூன் 22 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்த அவர், இணைய வசதி மூலம் இத்தளத்தை எங்கிருந்தும் பயன்படுத்த முடியும் எனக் கூறினார். இத்திட்டத்திற்காகப் பள்ளிகளில் தேவையான இணைய வசதிகளை ஏற்படுத்த பள்ளி முதல்வர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் பாடத் திட்டங்களை உருவாக்கவும், வினா வங்கிகளைத் தயாரிக்கவும் இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் உதவி, பயிற்சித் தேர்வுகள், சந்தேகங்களைத் தீர்க்கும் கருவிகள், மொழிக் கற்றல் பயிற்சிகளையும் இது வழங்கும் எனவும் இதற்கான சிறப்புப் பயிற்சி கையேடு வடிவமைக்கப்பட்டுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287699®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2288068)
வருகையாளர் எண்ணிக்கை : 32