பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் செயல்பாடுகள்: மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தகவல்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 4:07PM by PIB Chennai

தெலங்கானா மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 23 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளும் முழுமையாகச் செயல்பட்டு வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்த அவர், பழங்குடியினப் பண்பாடு, மொழி, பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஏகலைவா பள்ளிகளில் கற்பித்தல், கற்பித்தல் சாரா பணிகளுக்காக 9,111 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் 7,267 பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காகப் பள்ளிகளில் பழங்குடியினக் கலைக்கூடங்கள் அமைக்கப்பட்டு, பிராந்திய மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என அவர் கூறினார். தெலங்கானாவில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் 194 மாணவர்கள் ஜேஇஇ, நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், 2025-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தெலங்கானா ஏகலைவா பள்ளி மாணவர்கள் அதிக பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறினார். 2025-26 கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 99.85 சதவீத மாணவர்களும், 12-ம் வகுப்பில் 89.93 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287694&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2288044) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu