திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
ஐஐடி -களின் தரத்தை உயர்த்த ரூ. 30 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
22 JUL 2026 3:58PM by PIB Chennai
நாடு முழுவதும் தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு 9,642 தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்த நிலையில் 2026-ம் ஆண்டில் 13,856 தொழிற்பயிற்சி நிலையங்களாக அதிகரித்துள்ளது. இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2014-15-ம் ஆண்டில் இருக்கைகளின் எண்ணிக்கை 17,42,986 ஆக இருந்தது. அது தற்போது 20,07,580 என்ற எண்ணிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டு 403 தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்தன. தற்போது 415 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. 2014-15-ம் ஆண்டு இருக்கைகளின் எண்ணிக்கை 76,340 ஆக இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை 71,488 ஆக உள்ளது.
பிரதமரின் சேது திட்டத்தின் கீழ் நாட்டில் தொழிற்பயிற்சியின் தேவையையும், தரத்தையும் மேம்படுத்துவதற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.30,000 கோடி, மாநில அரசின் பங்களிப்பு ரூ.20,000 கோடி, தொழில்துறை பங்களிப்பு ரூ.10,000 கோடியாகும்.
இத்தகவலை மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287682®=3&lang=1
****
TV/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2288007)
आगंतुक पटल : 9