உள்துறை அமைச்சகம்
மத்திய ஆயுதக் காவல் படை வீரர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 3:50PM by PIB Chennai
மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:
'ஆயுஷ்மான் மத்திய ஆயுதப் படைகள்' திட்டம் மூலம் ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சை மற்றும் கடமையின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. பிரதமரின் உதவித்தொகைத் திட்டம் (PMSS) மூலம் ஆண்டுதோறும் 2,000 பேருக்கு உதவித்தொகை, மருத்துவக் கல்வியில் (MBBS/BDS) இடஒதுக்கீடு மற்றும் 'CAPF e-Awas' தளம் மூலம் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
'CAPF புனர்வாஸ்' திட்டம் மூலம் ஓய்வுபெற்ற வீரர்களுக்குத் தனியார் பாதுகாப்பு முகமைகளில் மறுவேலைவாய்ப்பு, சிறப்பு ஓய்வூதியம் மற்றும் 'பாரத் கி வீர்' நிதி ஆதரவு வழங்கப்படுகிறது. காவல் நலன்சார் அங்காடிகளில் (KPKB) 50% ஜிஎஸ்டி தள்ளுபடி, ஆபத்தான பகுதிகளில் பணியாற்றுவோருக்கு சிறப்புப் படி, விமான சேவை மற்றும் 'கௌரவப் பதவி' (Honorary Rank) வழங்கப்படுகிறது.
இத்தகவலை உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287666®=3&lang=1
****
TV/NB/SH
(रिलीज़ आईडी: 2287987)
आगंतुक पटल : 6