உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சைபர் குற்ற தடுப்பு மற்றும் கட்டமைப்பு நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUL 2026 3:56PM by PIB Chennai

சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்' (I4C) எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்:

குடிமக்கள் நிதி சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு மற்றும் '1930' இலவச உதவி எண் மூலம் 32.80 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ₹11,158 கோடிக்கும் அதிகமான தொகை நிதி மோசடியில் இருந்து தடுக்கப்பட்டது.

ஏப்ரல் 2026 முதல் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணத்தை விரைவாகத் திரும்ப வழங்க 'பண மீட்டமைப்பு தொகுதி' (Money Restoration Module) மற்றும் கணக்கு முடக்கத்தை நீக்க 'குறைதீர்ப்பு தொகுதி' செயல்படுத்தப்பட்டுள்ளன.

புதுதில்லி மற்றும் அசாமில் 'தேசிய டிஜிட்டல் விசாரணை உதவி மையங்கள்' செயல்படுகின்றன. மேவாட், அகமதாபாத், ஹைதராபாத், விசாகப்பட்டினம் உட்பட 7 கூட்டுச் சைபர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் (JCCTs) அமைக்கப்பட்டுள்ளன. 'பிரதிபிம்ப்' மற்றும் 'சமன்வயா' தளங்கள் மூலம் 29,800-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287674&reg=3&lang=1

****

TV/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2287979) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi